தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்து செல்வதன் காரணமாக நேற்று (25) பகல் முழுவதும் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக தீவின் 4 மாவட்டங்களில் 110 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. .
இதில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடகம்) திரு.பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி, மாத்தளை, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்கள் இந்த நிலைமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் சேதம் மற்றும் வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களில் 387 குடும்பங்களைச் சேர்ந்த 1,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு.பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
கண்டி மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 322 குடும்பங்களைச் சேர்ந்த 1,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.