மருத்துவமனை கனிஷ்ட ஊழியர்களினால் இன்று (9) காலை ஆரம்பமான அவசர வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் வைத்தியசாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு நிகரான சம்பள அதிகரிப்பு, வங்கிக் கடனுக்கான வரிசை அதிகரிப்புக்கு எதிர்ப்பு, புதிய இளநிலை ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.