இலங்கையில் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக உயர்ந்துள்ளது.சமீபகாலமாக நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 60 – 70 ரூபாய் வரை பரவலாகக் கிடைத்து வந்த மரவள்ளிக்கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை நுகர்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 200 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கின் விலை தற்போது சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.