கல்கிரியாகம, குடஹெட்டாவ, பலகல பிரதேசத்தில் மரதன் ஓட்டத்துடன் ஓடிய 10 வயது குழந்தை (ஏப்ரல் 22) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அப்பகுதியில் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது சகோதரருக்கு ஆதரவாக ஓடிய வேளையில் குழந்தை வீதியில் சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடனடியாக கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணத்தை கல்கிரியாகம பொலிஸார் இதுவரை கண்டறியாத நிலையில், குழந்தையின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, பிரேதப் பரிசோதனை கெக்கிராவ ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.