மனைவி கொழும்பில் தங்கியிருந்தவேளை வைத்தியரின் திருவிளையாடல், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றசம்பவம்.

0
363

கடந்த வியாழன் (22-12-2022) யாழ் நகரில் கிளினிக் நடத்தி வந்த வைத்தியர் ஒருவரை இரவு 11 மணியளவில் கிளினிக்கிற்குள் நுழைந்த அவரது மனைவி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மேலும் தன்னுடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளராக இருந்த இளம் பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மருத்துவ மனைக்கு விரைந்தனர்.

அதன்பிறகு, அந்த கிளினிக்கிற்குள் ஒரு குடும்பம் சண்டையிட்டதை போலீசார் பார்த்தனர். தலை மற்றும் முகத்தில் காயம் அடைந்த டாக்டரை போலீசார் மீட்க முயன்றனர்.ஆனால் அவர் கிளினிக்கை விட்டு வெளியே வராது போலீசாரை திருப்பி அனுப்பும் நோக்கத்தில் இருந்தனர். அத்துடன் கிளினிக்கின் கழிவறை பகுதி பூட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்து அவலக்குரல் கேட்கவே அங்கு பொலிஸார் சென்ற போது அரை குறை ஆடையுடன் வைத்தியரின் பெண் உதவியாளர் வெளியே வந்து ஓடிச் சென்று பொலிஸாரின் வாகனத்துக்குள் புகுந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

கழிவறை கதவுக்கு வெளியே தடியை பிடித்துக் கொண்டிருந்த வைத்தியரின் மனைவி, அந்த பெண்ணை பொலிஸ் வாகனத்திற்கு துரத்தித்துரத்தித் தாக்கிச் சென்ற போது பொலிஸார் தடுத்ததாக தெரியவருகின்றது.
கொலைவெறியுடன் மனைவி அங்கேயே நின்று கொண்டு கையிலிருந்த பொருட்களால் கணவனை தாக்கியதும், போலீசார் தடுத்து நிறுத்தி டாக்டரை காரில் செல்ல அனுமதித்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மருத்துவரின் உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற போது, ​​வைத்தியர் அங்கு வந்து குறித்த பெண்ணை தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது, தனது தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக தான் கொழும்பில் தங்கி நிற்கும் வேளைகளில், தனது வயதான தாய் மற்றும் சிறு பிள்ளைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு குறித்த வைத்தியர் இரவில் வீட்டில் நிற்பதில்லை என்றும் இது தொடர்பாக தனக்கு கிடைத்த தகவல்களை அடுத்து வைத்தியருக்கு தெரியாது கொழும்பிலிருந்து ரயிலில் வந்து நிலமையை அவதானித்த போது வைத்தியர் கிளினிக்கின் குறித்த இளம் பெண்ணுடன் தங்கியிருப்பதை அவதானித்ததாக வைத்தியரின் மனைவி கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு இரு தரப்பும் இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த விரும்பாததால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவருகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here