சினிமாவில் முன்னணி நடிக, நடிகைகள் படங்களில் நெருக்கமாக நடிப்பதன் மூலம் பல வதந்திகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலரின் பேசும் பொருளாக ஆளான நிலையில் நட்சத்திரங்கள் சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் சிலர் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
தனுஷ்-சுருதிஹாசன் : 2012 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் இணைந்து நடித்த 3 படம் கதை அடிப்படையிலும் வணிக ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் தனுசுடன் நெருக்கமாக நடித்ததற்காக சுருதிஹாசன் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த ஸ்ருதிஹாசன் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் என்னைச் சுற்றி பல வதந்திகள் பரவி வருகிறது என் உடலில் மைக்ரோ சிப் வைத்து என்னை நிரூபிக்க முடியாது என காட்டமான பதில் கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்: இருவரின் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு பல உச்சங்களுக்கு கொண்டு சென்றது. “பண்ணையாரும் பத்மினியும், ரம்மி தர்மதுரை” போன்ற படங்களில் ஒன்றாக நடித்த விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா அவர்கள் பற்றி பல வதந்திகள் பரவியது. இதுகுறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நல்ல மேனரிசங்களை கொண்ட நண்பர் மற்றும் தொழில் ரீதியாக சில நுணுக்கங்களையும் ஈகோ இல்லாமல் கற்றுத் தந்திருக்கிறார் என அறிவித்துள்ளார். மேலும் இவரது நடை, வாத்து நடை போன்று வித்தியாசமாக இருக்கும் என்றும் கிண்டல் அடிக்கவும் செய்துள்ளார்.
பிரித்திவிராஜ்-பிரியாமணி: தமிழில் நினைத்தாலே இனிக்கும்,ராவணன் போன்ற படங்களில் பிரித்திவிராஜ் மற்றும் பிரியாமணி இணைந்து நடித்திருந்தனர் தமிழைத் தவிர சத்யம் என்ற மலையாளத்திலும் நெருக்கமாக நடித்ததற்காக இவர்கள் ஜோடி பரபரப்பாக பேசப்பட்டது.
மாதவன்-சதா: சாக்லேட் பாயான மாதவன் ஆரம்ப காலங்களில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் சதா உடன் எதிரி படத்தில் இணைந்த போது இவர்கள் காதலிக்கிறார்கள், விருந்த நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்பதாக வதந்திகள் பரவியது இதற்கு சதா, கருத்து சொல்ல விருப்பமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
மிஷ்கின்-பாவனா: சித்திரம்பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மிஷ்கின் பல வித்தியாசமான படங்களை இயக்கவும் நடிக்கவும் செய்திருந்தார். தற்போது மாவீரன் மற்றும் லியோவில் வில்லனாக தோன்றினார் மிஷ்கின், சித்திரம் பேசுதடி படத்திற்கு பின் ஒரு விழாவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சித்திரம் பேசுதடி படத்தில் பாவனா உடன் இருந்தது தான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்று யாரும் எதிர்பாக்காத வகையில் கூறி அதிர்ச்சி அளித்தார்.