குருணாகலில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த மாதம் 27ஆம் திகதி, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் மோதலாக மாறிள்ளது.இந்நிலையில், கோபமடைந்த கணவர் தமது மனைவியை தாக்கியுள்ளதுடன், பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.