மனிதனின் பற்களைப் போன்று பல்வரிசை கொண்ட அப்பூர்வ வகை மீன் ஒன்று அமெரிக்காவில் பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆழ்கடலுக்குள் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.இவற்றில் பலவற்றைப் பற்றி அறிவு மனிதர்களுக்கு இருக்கிறது.இருந்த போதிலும் கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் பல உயிரினங்கள் மனிதனின் அறிவுக்கு எட்டமால் உள்ளன .
இவ்வாறு ஆழத்தில் மறைந்திருக்கும் வினோத உயிரினங்கள் திடீரென வெளிவரும் போது அவை தொடர்பான செய்திகள் வைரலாகின்றன.அப்படியான ஒரு சம்பவமாகவே இது பதிவாகியுள்ளது .
அமெரிக்காவில் கடற்கரைப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் ஒருவருக்கே இவ்வகையான மீன் பிடிபட்டுள்ளது.குறித்த மீனவர் இந்த விசித்திரமான மீனின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதுடன் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இத்தனை செம்மறியாட்டு மீன் என்றும் சொல்லவார்கள் என்பதுடன் இவ்வகை மீன்களை பிடிப்பது மிகவும் கடினம் என்றும் சொல்லப்படுகின்றது.காரணம் இவை மீனவர்கள் வீசும் தூண்டில்களையே வெட்டி சாப்பிடும் திறன் கொண்டவை என்றும் சொல்லப்படுகிறது.