கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீடொன்றினுள் புகுந்து அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீடொன்றினுள் புகுந்து அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (17.02.2023) கந்தளாய் பேராற்றுவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேர் மது போதையில் வீடொன்றின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகள் சந்தேகநபர்கள் சவள் மற்றும் இரும்புகளை கைவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களுக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸார் சந்தேகநபர்களை தேடி வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் அணைக்கட்டு பகுதியில் இவ்வாறு குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.