மதுபோதையில் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இன்றும் கொழும்பில் இருந்து பிரதான வீதிகளில் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களைச் சோதனையிடலாம் எனவும், இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலீஸ் அதிகாரிகளிடம் பிரச்னை செய்ய முயற்சிக்காதீர்கள், அப்படி செய்தால் பயணம் தாமதமாகும்,” என்றார்.
மது அருந்திய பின்னர் குளங்களில் நீராடவோ அல்லது ஆறுகள் அல்லது நீரோடைகளில் குளிக்கவோ வேண்டாம் என்றும் மது அருந்துவதை தவிர்க்குமாறும் மக்களிடம் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் எப்போதும் தங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.