மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், லங்கா கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 134 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, லங்கா மண்ணெண்ணெய் லீற்றர் 305 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் அதேவேளை, தொழிற்துறை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 330 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலையில் மாற்றம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.