நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி நிலவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.