Homeஇந்தியாமணிப்பூர் வன்முறையில் மனநிலை பாதித்த பெண் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை- 12 மணி நேர...

மணிப்பூர் வன்முறையில் மனநிலை பாதித்த பெண் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை- 12 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

Published on

மணிப்பூரில் பெண் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகா மக்கள் வசிக்கும் பகுதியில் இன்று 12 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு ஐக்கிய நாகா கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் பொதுமக்களில் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3000திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இன்னும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள 340 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த வன்முறையில் என் ஒருவர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Kangpokpi மாவட்டத்தில் உள்ள குக்கி கிராமத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி உள்ள போலீசார், கொலை தொடர்பாக 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே Kangpokpi மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேர்தல் வேட்டையில் 5 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this