மணிப்பூர் மாநிலம் சண்டில் என்ற இடத்தில் நள்ளிரவு 1.07 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 90 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவானது.
மேலும் ஆப்கானிஸ்தானில் பைசாபாத் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றிரவு 11.32 மணிக்கு பூமிக்கு அடியில் 145 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவானது.