மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ல் மெய்தி இன மக்களுக்கும் ருக்கி-இன மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.