Homeஇந்தியாமணிப்பூர் கொடூரம் குறித்து கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகாரை கண்டுகொள்ளாத தேசிய மகளிர் ஆணையம்

மணிப்பூர் கொடூரம் குறித்து கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகாரை கண்டுகொள்ளாத தேசிய மகளிர் ஆணையம்

Published on

மணிப்பூர் கொடூரம் குறித்து கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகாரை தேசிய மகளிர் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பற்றி ஜூன் 12ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகவும், எந்த பதிலும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

2 பெண்கள் மற்றும் வெளிநாட்டில் இயங்கும் பழங்குடியின அமைப்பு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தேசிய மகளிர் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது வீடியோ வைரலானதால் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. மேலும் மணிப்பூர் வீடியோ காட்சியை ட்விட்டரில் இருந்து நீக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this