மட்டக்களப்பில் உள்ள வாவியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றைய தினம் (16-02-2023) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ.சுதர்சன் என அடையாளம் காணப்பட்ட நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில் இவரது சடலம் இன்றைய தினம் மட்டக்களப்பு வாவியில் மீட்கப்பட்டுள்ளது.