மட்டக்களப்பில் திடீரென மயக்கமுற்ற நிலையில் முகாமையாளர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில், புலம்பெயர் நாடொன்றில் வசிக்கும் நன்கொடையாளரால் குறித்த மகளிர் இல்லத்திற்கு இல்லத்திற்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி மூடைகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வின் நிறைவில் மகளிர் இல்லத்தின் முகாமையாளரான 63 வயதுடைய சிவசம்பு பாக்கியராசா என்பவர் மகளிர் இல்லத்திற்கு உதவி புரிந்த நபருக்கு நன்றி கூறி உரையாற்றும்போது திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளார்.சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த முகாமையாளர் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தின் வளர்சிக்காக நீண்டகாலமாக சேவையாற்றியிருந்ததுடன் இவரது மறைவு பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.