[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கைமட்டக்களப்பில் கடிதம் எழுதி வைத்துவிட்டு 15 வயது சிறுமி மாயம்

மட்டக்களப்பில் கடிதம் எழுதி வைத்துவிட்டு 15 வயது சிறுமி மாயம்

Published on

spot_img
spot_img

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை (15) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மகளூர் முதலாம் பிரிவு நீலகிரி வீதியைச் சேர்ந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், அதனால் தங்களை பார்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் என்னை பார்க்கக் கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்வதாகவும் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை மேசன் தொழில் செய்துவருவதாகவும், மூத்த சகோதரன் திருமணம் முடித்து சென்றுள்ளதாகவும், சிறுமியும் அவருடன் சகோதரன் ஒருவர் உட்பட இருவர் பெற்றோருடன் வாழ்ந்து வருவதாகவும், பெற்றோர் கஸ்டப்பட்டு வருவதாகவும் தந்தையின் தாயாரான அப்பம்மா மற்றும் உறவினர்கள் மாத்தளையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.காணாமல் போன சிறுமி தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Latest articles

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...

பிக்கு தாக்கியதில் உயிரிழந்த முதியவர்…..

கிரியுல்ல - கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்து...

More like this

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...