Homeஇலங்கைமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவில் போராட்டம்!

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவில் போராட்டம்!

Published on

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு காவல்துறையினருக்கு மனுவொன்று அனுப்பப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் ஒவ்வொரு சமூகத்திடமும் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும்.

நெடுந்தீவு காவல் நிலையத்தால் வரையறுக்கப்பட்ட இடங்களை ரோந்துப் பணியினூடாக கண்காணிப்பதற்கு இடைவிடாது ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.நெடுந்தீவின் சுற்றுலா தளங்கள் ஒவ்வொரு நாளும்  நெடுந்தீவு காவல் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும். வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தும் செயற்பாடு நெடுந்தீவு காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் மக்களின் தரவுகளை நவீன தொழிநுட்பத்துடன் கொண்டு பயணிகளை சிரமப்படுத்தாது அதிவிரைவாக தரவுகளை இறங்குதுறையில் வைத்து சேமித்து கொள்ளும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்” எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this