ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் மகிந்த கலந்து கொள்ளவில்லை.
இந்த இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதி சுகவீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என சமூகவலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது. வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.