மகாவலி நீரை கந்தளாய், கிண்ணியாவுக்கு கொண்டு வரும் திட்டத்தை மீண்டும் செயற்படுத்தினால் அதற்கான நிதியை தருவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் தயார்” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் தெரிவித்தார்.
கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் 2024 வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே தௌபீக் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
2017 ஆம் ஆண்டு திட்டத்ற்காக இலங்கை அரசி மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டு அதற்கான நிதியும் பெறப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்திற்கான சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணி தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்ததால் அத்திட்டத்திற்கான காணியை பெறமுடியாமல் போய்விட்டது. அதற்கான காணியை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் எனவும் கந்தளாய், கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 6000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளுக்கு நீரைப்பெற்றுக்கொள்ளக்கூடிய இத்திட்டத்திதை மீண்டும் செயற்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு தேவையான 45 மில்லியன் டொலர்களை சவூதி அபிவிருத்தி நிதியம் தருவதற்கு தயாராக இருப்பதாக தெரித்தார்.
கடந்த காலங்களில் தோப்பூர் மற்றும் மூதூர் தக்வா நகர் பிரதேசத்தில் இறங்கு துறைமுகங்களை அமைப்பதற்கு சகல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் பொருளாதார நெருக்கடிகளினால் செய்யமுடியாமல் போய்விட்டதாகவும் தற்போது அதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகமான மீனவர்கள் கிண்ணியா பிரதேசத்தில் மீனவர் துறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய அமைச்சரிடம் வினவிக் கொண்டார்.
By: Pirathee