மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியின் 10வது நாளான ஆனந்த் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதன் போது, ரத்னகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை எடுத்து சென்ற டெம்போ வேனின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 17 வயது சிறுமி மற்றும் டெம்போ ஓட்டுனர் ஆகிய 2 பேர் பலியாகினர். மேலும், சதாரா, நாந்தெட், ஜூஹு, ராய்காட்டில் ஒருவர் என 4 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதே போல், நாஷிக் பஞ்சவாடியில் 3 பேர், நாஷிக்கில் 3 பேர் என மொத்தம் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மொத்தமாக மகாராஷ்டிரா முழுவதும் 13 பேர் பலியாகி உள்ளனர்.