சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் மன்னார் மாவட்ட செயலகம் பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
யாழ் பல்கலைக் கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் , ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான புனர்வாழ்வு நிறுவனம் மன்னார் மாவட்ட செயலகத்துடன் இணைந்து இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இவ்போட்டிகளானது மன்னார் மாவட்டப் பாடசாலைகளில் தரம் 8 முதல் 10 வரையிலான வகுப்பகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் கவிதைப் போட்டிகளும்,தரம் 11 முதல் 13 வரையிலான வகுப்பகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் கட்டுரை , ஓவியப் போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இவ்போட்டிகள் சம்பந்தமான விதிமுறைகள் யாவும் சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்குப்பற்றும் மாணவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமது சுயவிபரத்துடன் ஆக்கங்களை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இவ் மகளிர் தினத்தை முன்னிட்டு அன்றையத் தினம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் . கலை நிகழ்வுகள் , சிறப்பு சொற்பொழிவு என பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.