பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து பல குற்றங்களைச் செய்த இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொழும்பு வடக்குப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 83 கையடக்கத் தொலைபேசிகள், நான்கு டேப்கள் மற்றும் மூன்று மடிக்கணினிகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் முறையே 24 மற்றும் 36 வயதுடைய ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேவல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.