மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்த மூதுரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை (28.03.2023) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக மட்டு. தலைமைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சுற்றுலா துறைக்கான அனுமதிபத்திரத்தை பெற்று அதற்கான காரியாலம் ஒன்றை நகர்பகுதியிலுள்ள கல்முனைவீதியில் அமைத்து கொண்டு அங்கு வெளிநாட்டு வேலைவாய்பு பெற்று தருவதாக ஒருவரிடம் 4 இலச்சத்து 45 ஆயிரம் ரூபாவை வாங்கி சுற்றுலா விசாவில் கட்டார் நாட்டுக்கு அனுப்பியுள்ளார்.
அங்கு வேலைக்கு என்று சென்றவர் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்ட நிலையில் அந்த அறைக்கான வாடகை பணத்தை செலுத்தாதால் அவரை அறையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து தான் வேலைவாய்ப்பு என தெரிவித்து சுற்றுலா விசாவில் வந்துள்ளமை தெரியவந்ததையடுத்து அங்கிருந்து விமான மூலம் நாட்டுக்கு திரும்பிவந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி ஜி.எம்.பி.ஆர். பண்டாரவின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரி.எம். எஸ்.கஜநாயக்கா தலைமையிலான குழவினர் மேற்கொண்ட விசாரணையில் இன்று மூதூரைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து வேறு ஒரு நபரின் கடவுச் சீட்டையும் கைப்பற்றினர்.
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.