போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பியகம பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் பல்கலைக்கழகம் ஒன்றின் வெளிவாரி கற்கை நெறியை கற்கும் நபர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நபரிடம் இருந்து 65 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் வெளிவாரி பட்டக் கற்கை நெறிக்காக பதிவு செய்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
28 வயதான குறித்த நபர் பொல்பித்திகம ஹத்போக்குன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.