மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் கையொப்பம் போலியான கடிதங்கள் மூலம் கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 180 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எந்தவொரு பிள்ளையையும் எந்தவொரு பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளுமாறு மேலதிக பணிப்பாளர் பிரதேசத்தில் உள்ள எந்தவொரு பாடசாலை அதிகாரியிடமும் கோரிக்கை விடுக்கவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாகாண கல்வி அலுவலகம் நடத்திய கணக்காய்வு விசாரணையில் இந்த மோசடி தெரியவந்துள்ளது.