Sri Lanka மற்றும் South Africa அணிகள் மோதிய உலக கிண்ண போட்டியில் South Africa 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .
முதலில் துடுப்பெடுத்தாடிய South Africa அணி இலங்கை பந்துவீச்சாளர்களை துவைத்தெடுத்தது. Quinton de Kock, van der Dussen மற்றும் Markram ஆகிய மூவரும் சதம் அடிக்க South Africa அணி உலக கிண்ண வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையான 428 ஓட்டங்களை பெற்று கொண்டது. Markram 49 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் என்ற சாதனைக்கு சொந்தம் ஆனார்.
பதிலுக்கு துரத்த முடியாத இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு Kusal Mendis அதிரடியாக ஆடி சிறப்பான ஆரம்பம் தந்தார். தொடர்ந்து Asalanka மற்றும் Shanaka அதிரடி காட்ட இலங்கை அணி கௌரவமான இலக்கை அடைந்து தோல்வியை தழுவியது.