Homeஇந்தியாபோதைப் பொருள் கடத்தல்: நடிகர் உள்பட 2 பேர் கைது!

போதைப் பொருள் கடத்தல்: நடிகர் உள்பட 2 பேர் கைது!

Published on

பெங்களூருவில் இருந்து 54 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் கடத்திய சம்பவத்தில் நடிகர் உள்பட 2 பேரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தடுப்பதற்காக போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறையினருடன் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் ரயில் பாலக்காடு ஒலவக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது.

இந்த ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படை நுண்ணறிவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த ரயிலில் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஒரு பொதுப் பெட்டியில் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கில் 54 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த சவுக்கத் அலி மற்றும் பிரணவ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சவுக்கத் அலி ஏராளமான ஆல்பங்களில் நடித்துள்ளார்.பிரணவ் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இருவரும் பெங்களூருவிலிருந்து போதைப் பொருளை வாங்கி கேரளாவில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Latest articles

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று நேற்று (03.10.2023)காலை கரையொதுங்கியுள்ளதாக...

More like this