கொழும்பு மாவட்டத்தில் இன்று (29) காலை 06 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சோதனையில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இன்று அதிகாலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 கிலோ ஹெரோயின் மற்றும் 1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தென் மாகாணத்திலும் விசேட அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.