போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக தனது 15 வயது காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபரின் 7 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருணாகல், மாவத்தகம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிப்பவராவார்.
இந்தச் சிறுமியின் தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததாகவும், சிறுமி தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்க்கப்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.