பொலிஸ் பரிசுத் தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் எடரமுல்லை காவற்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் பேலியகொட பிரிவு மோசடி விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் சார்ஜன்ட் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவார்
பொலிஸாரின் பரிசில் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.