கொரோனாப் பேரிடர் காரணமாக மேற்குலக நாடுகளின் பொருளாதாரமே ஆடிப்போயுள்ள நிலையில், இந்தியா ஓரளவு அதனைத் தாக்குப் பிடித்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றது என அந்நாட்டு ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் மேற்குலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா
தன்னை தற்காத்துக்கொண்ட இந்தியா
பல தசாப்தங்களுக்குப் பின்னர் அந்த நாடுகளில் பொருள்களின் சடுதியான விலையேற்றம் இடம்பெற்றுள்ளதோடு, அன்றாடம் திரட்டும் பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ரஷ்யா – உக்ரைன் போரும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு பொருளாதாரத்தில் மிகக் கடுமையான நிலைமை காணப்பட்டாலும், உக்ரைனுக்காக பில்லியன் கணக்கில் வாரியிறைக்கின்றன.