நேற்றிரவு தெமட்டகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இராணுவ சிப்பாயின் ஆயுதம் தவறாக சுட்டதில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இரண்டு இராணுவத்தினர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை ஹல்கஹகும்புர பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது காயமடைந்த 25 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.