பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம் கட்ட கட்டிடத்தின் 13வது மாடியில் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அலுவலக அமைப்பில் இருந்து ஊடக ஒருங்கிணைப்பு மையம் நேற்று முதல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இனிமேல் பின்வரும் புதிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.புதிய தொலைபேசி எண்கள் 011 – 2887903 011 – 2887906 011 – 2887907 011 – 2887973