பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Meta நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் விடுத்துள்ள விசேட குறிப்பொன்றை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பான குறிப்பில் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது, இம்முறை ஊழியர் குறைப்பு மே மாதம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பேஸ்புக் ஊழியர்களை குறைப்பது இது மூன்றாவது முறையாகும்.
முந்தைய இரண்டு தடவைகளிலும் சர்வதேச ரீதியில் சுமார் 21,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.