நீர்கொழும்பில் பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த, 38 வயதான திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு பிடிபன வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். நீர்கொழும்பு பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அமெரிக்காவில் வாழும் இலங்கை கோடீஸ்வரர் போல் நடித்து சந்தேகநபர் பெண்ணை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் போலியான முகநூல் பக்கத்தையும் உருவாக்கி அதனூடாக பெண்ணுடன் காதல் உறவை வளர்த்து வந்துள்ளார். சந்தேகநபர் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை கோடீஸ்வரர் போல் தன்னை காட்டிக்கொண்டு பேஸ்புக் ஊடாக இந்த உறவை பேணி வந்துள்ளார்.
விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அமெரிக்கா அழைத்துச் செல்வதாக முகநூல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் மூலம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.