இன்று காலை பேலியகொடையில் உள்ள தனது வீட்டில் இருந்த 32 வயதுடைய நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் சில வாரங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அவர் மீது நீதிமன்றத்தில் பல கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.