நாரம்மல – தம்பலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,18 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த இன்று (19.10.2023) இடம்பெற்றுள்ளது.
அலவ்வையிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து தம்பலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்துள்ளது.
காயமடைந்தவர்களில் 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும்,11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 51 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.