பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
அங்கு டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பல காரணங்களை முன்வைத்த பஸ் உரிமையாளர்கள், டீசல் விலையை 30 ரூபாவால் குறைத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேரூந்து கட்டணத்தை எவ்வாறாயினும் குறைக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்தும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என அகில இலங்கை செயலாளர் திரு.அஞ்சன பிரியஞ்சித் பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு ‘திவ்யன’விடம் தெரிவித்தது.