பதுளை – பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் பேரனின் தாக்குதலுக்கு இலக்காகி தாத்தாவும், பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (04.04.2023) பதிவாகியுள்ளது.இந்த சம்பவத்தில் 80 வயதுடைய தாத்தாவும், 70 வயதுடைய பாட்டியுமே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும், பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தாத்தா தெமோதர வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
எனினும் பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் பணிகளை பல்லகெடுவ பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.