எரிவாயு விலை குறைவடைந்தால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திகள் விறகு மற்றும் எரிவாயு கொண்டு மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்திகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக கூடி ஆராய உள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இறுதியாக பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.