தெஹிவளையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் 25 வயதான ரவிந்து சஹான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
ரயில் பாதைக்கு அருகில் தொலைபேசியில் பேசிக்கொண்டு காத்திருந்த போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.