கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சில பொருட்களின் மொத்த விலையில் சரிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலையும் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு சுமார் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.எனினும் தற்போது ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 130 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.