ATM அட்டைகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 24 வயதுடைய பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த நபர் கைது செய்யப்படும் போது கிட்டத்தட்ட 15 ஏடிஎம் அட்டைகளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவுவதாக கூறி ஏ.டி.எம் கார்டுகளின் பின் நம்பர்களை கைதானவர் பெற்றுக் கொண்டு, ஏ.டி.எம் கார்டை வைத்து, அதற்கு பதிலாக போலி ஏ.டி.எம் கார்டை வழங்குவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு 50 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, சந்தேகநபர் நேற்றிரவு (ஏப்ரல் 10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.