காலியில் இருந்து மருதானை வரை சென்று கொண்டிருந்த சமுத்திராதேவி ரயிலின் எஞ்சின் பெட்டி இன்று (ஏப்ரல் 09) களுத்துறை-வடக்கு பகுதியில் ரயிலில் இருந்து பிரிந்தது.
இன்று காலை களுத்துறை-வடக்கு புகையிரத நிலையத்திற்கும் இலக்கம் 01 புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புகையிரத அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ரயிலின் இயந்திரம் ரயிலில் இருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியதாக கூறப்படுகிறது.
சுமார் 15 நிமிடங்களின் பின்னர் ரயில் மீண்டும் சரி செய்யப்பட்டு மருதானை நோக்கி இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.