புற்றுநோய் சிகிச்சைக்காக நான்கு மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏகநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையும் அமைக்கப்படும் என PMD மேலும் தெரிவித்துள்ளது.