செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுத்தாண்டு ராசி பலன்கள் 2023, நீங்கள் இந்த ராசிக்காரர்களா ஆட்டிப்படைக்கும் சனியும் உங்கள் எதிர்காலமும்...

புத்தாண்டு ராசி பலன்கள் 2023, நீங்கள் இந்த ராசிக்காரர்களா ஆட்டிப்படைக்கும் சனியும் உங்கள் எதிர்காலமும்…

Published on

spot_img
spot_img

பிறந்திருக்கும் புத்தாண்டான 2023இற்கான ராசிபலன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 17இல் கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி, ஆண்டின் நடுவில் ஏப்ரல் 22இல் மீன ராசியில் குரு பெயர்ச்சி, பிற்பகுதியில் அக்டோபர் 30இல் ராகு – கேது பெயர்ச்சி என நடக்கிறது.

மேஷம்

மேஷ ராசியினரே,2023 ஆம் ஆண்டு உங்களை பொறுத்தவரை மிகச்சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆண்டாகவே இவ்வாண்டு அமைந்துள்ளது. சனிபகவான் ஜனவரி 17 ஆம் திகதி இலாபஸ்தானமான 11 ஆம் இடத்திற்கு வருகிறார். இதுவரை நீங்கள் பட்ட கஷடங்கள் துன்பங்களுக்கெல்லாம் இவ்வாண்டு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. உங்களுக்குள் இருக்கும் அசாத்தியமான திறமைகள் வெளிப்படும். இவ்வாண்டில் எதிர்பாராத பல நிகழ்வுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புண்டு. எல்லா காரியங்களிலும் திட்டமிட்டு செயற்படுவது நன்மை தரும். தற்போது குரு பகவான் விரய ஸ்தானத்தில் அமைந்துள்ளார். மே மாதம் வரை அவர் ஜென்ம ஸ்தானத்திற்கு வருவார். எனவே அவர் பல நன்மைகளை தந்தாலும் திட்டமிடல் அவசியமாகும். அவசரமின்றி பொறுமையுடன் செயற்பட வேண்டும். உங்கள் திறமைகளை அறிந்து செயற்பட்டால் சிறப்பாக சாதிக்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற காலம் எடுக்கும். எனவே வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நன்மை தரும். மேலதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படும். இவ்வாண்டு உங்களை பொறுத்தவரை நன்மைகள் பல நடக்கும் ஆண்டாகும்.

ரிஷபம்

பல எதிர்பார்ப்புகளுடன், இவ்வாண்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடப ராசியினரே உங்களுக்கும்,2023 ஓர் சிறப்பான ஆண்டாகும். மன உளைச்சலை சந்தித்து, அடுத்த கட்டத்தை எவ்வாறு நகர்வது, எதிர்காலமே சூனியமா அல்லது எதிர்காலம் சிறப்பாக இருக்குமா என்ற உங்களது கேள்விக்கு நல்ல பதில் உள்ளது.சனி பகவான் 10ம் இடத்தில் உள்ளார். நம்பிக்கையை தளரவிடாதீர்கள். குரு 11 ஆம் இடத்திலுள்ளார். தொ ட்டதெல்லாம் பொன்னாகும் ஓர் அற்புத காலம் இதுவாகும். சில துணைக்கிரகங்களால் தடை, தாமதம் வந்தாலும் அதையும் வெற்றி கொள்வீர்கள். நிதானமும் பொறுமையும் தேவை. நிதானமாக எல்லா காரியங்களிலும் கண்ணும் கருத்துமாக செயற்படுங்கள். சொந்த முடிவே வெற்றி தரும். பிறரின் ஆலோசனை வீண் பிரச்சினையை உருவாக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களால் உதவி ஒத்தாசைகள் கிடைக்கும். நல்ல ஆண்டாக அமைகிறது.

மிதுனம்

இந்த ஆண்டு பல நன்மைகள் உங்களை நாடி வந்தாலும் சில நேரங்களில் புதிய பிரச்சினைகளுக்கும் தடைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடிய தன்மை தென்படுகிறது. எனவே எல்லா விடயத்திலும் திட்டமிடல் அவசியம். வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். எதிர்கால தீட்டங்களை தவிர்ப்பதால் பல பிரச்சிணைகளை தீர்த்துக் கொள்ளலாம். புதிய முதலீடுகள், வாகனங்கள் வாங்கும் போது அதிக கவனம் தேவை. பூர்வ புண்ணிய சொத்துக்களில் வீண் பிரச்சினைகள், சம்மந்தமில்லாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்ற வாய்ப்புக்கள் இருப்பதால் எல்லா விடயத்திலும் நிதானத்துடன் செயற்படுவீர்களானா ல் ஓரளவு நன்மையடைய கூடிய சூழல் உருவாகும். உங்கள் வாழ்க்கையில் பல காரியங்கள் சாதகமாக நடப்பதற்கு அதிக முயற்சி தேவை. சோம்பலை தவிர்த்து முயற்சியுடன் செயற்ப டுவீர்களானால் எதிர்பாராத பல நன்மைகள் நிச்சயம் அடைவீர்கள். தக்க சமயத்தில் பெரிய மனிதர்களின் உதவியால் நன்மைகள் கிட்டக்கூடிய சூழலும் உருவாகும். குழந்தைகள் விடயத்தில் சற்று விட்டுக்கொடுத்து செயலாற்றுங்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். பொறுமையும் நிதானமும் இருந்தால் பல நன்மைகள் கிடைக்ககூடிய சூழல் உருவாகும்.

கடகம்

சற்று பொறுமையாக நிதானமாக செயலாற்ற வேண்டிய ஆண்டு. சனி பகவான் அட்டம ஸ்தானதில் அமர்ந்திருக்கிரார். பல தடைகள், தாமதங்கள் மன உளைச்சல்கள் ஏற்படகூடிய சூழலை உருவாக்குவார். மனம் தளராதீர்கள். திட்டமிட்டு செயலாற்றுவீர்களேயானால் நிச்சயம் இவ்வாண்டை ஒரு பொன்னான ஆண்டாக மாற்றக்கூடிய ஆற்றல் உங்களுக்கு அமைகிறது. குருபகவான் 9ம் இடத்தில் அமர்ந்திருக் கிறார். பல நன்மைகள் செய்ய கத்திருக்கிறார். இன்று உங்களுக்கு ஏமாற்றமாக அமைவது நாளை வெற்றியாக மாறும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். பொறுமை மிக மிக அவசியம். அவசர முடிவுகளால் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் தென்படுகிறது. நல்ல நட்பை இழக்கக்கூடிய சூழலும் உருவாகும்.
குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றது. பண விடயத்தில் அதிக கவனம் தேவை. திட்டமிட்டு செயற்படுவீர்களேயானால் ஓரளவு சமாளிக்கக்கூடிய சூழல் தென்படுகின்றது. உங்களை பற்றி தவறான அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அமைகிறது. இதற்கு நீங்களே காரணமாக அமைவீர்கள். வார்த்தைகளை குறைத்து நிதானமாக செயலாற்றுவீர்களேயானால் இந்த ஆண்டு உங்களுக்கு பல நன்மைகள் தரக்கூடிய ஆண்டாக அமையும்.

தொடரும்……

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...