செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுத்தாண்டு ராசி பலன்கள் 2023, சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஒரு பார்வை

புத்தாண்டு ராசி பலன்கள் 2023, சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஒரு பார்வை

Published on

spot_img
spot_img

சிம்மம்

சிங்க நடை போடும் தன்னம்பிக்கை மிக்க ராசி நீங்கள். எதற்கும் சோர்ந்து விடமாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு கண்டச்சனி என்ன செய்ய போகிறது.தைரியமாக இருங்கள். வரும் பிரச்சினைகளை அழகாக சமாளிக்கலாம். மன உறுதி இருந்தால் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். மனமே எம்மை செம்மைப்படுத்தும். எனவே அவசர முடிவு எடுக்காமல் மிக நிதானமாக, பொறுமையாக செயலாற்றுங்கள். சனி பாகவனும் குரு பாகவனும் உங்களுக்கு சாதகமாக இல்லை. துணை கிரகங்களே உங்களுக்கு உதவி புரிகின்றன. எனவே தொழில் ரீதியில் திடீர் பிரச்சனைகளுக் கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் என்றால் அதை காப்பாற்றுவதற்கு பல தடைகள், தாமதங்கள் ஏற்படும். எதிர்பார்ப்பது தக்க சமயத்தில் நிறைவே றாமல் மனம் சஞ்சலப்படும். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அத்தனைக்கும் நீங்கள் பொறுமையாக நிதானமாக இறை வழிபாட்டுடன் செயற்படுவீர்களேயானால் இவ்வாண்டை ஒரு வெற்றியான ஆண்டாக மற்றக்கூடிய சூழல் உருவாகும். ஆறு மாதங்கள் வரை நீங்கள் பொறுமையாக இருந்தீர்களேயானால் அதற்கு பிறகு வரும் வராங்கள் எல்லாம் உங்களுக்கு வெற்றியாக மாறக்கூடிய சூழல் உருவாகும்.பொறுமையும் இறை வழிபாடும் தைரியமும் இவ்வாண்டில் உங்களுக்கு அதிகமாக தேவைப்படுகின்றது, உங்களை நம்பி செயலாற்றுங்கள் பிறரை நம்பாதீர்கள். நிச்சயம் வெற்றியடைவீர்கள்.

கன்னி

உங்கள் வாழ்க்கையில் மிக சிறப்பான பலாபலன்களை அனுபவிக்க கூடிய ஒரு சிறந்த ஆண்டாகவே 2023 ஆம் ஆண்டு அமைய போகிறது. பல நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். உங்கள் முயற்சியும் செயல் திறனும் தீட்டமிடலும் இருந்தால் நிச்சயம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.இவ்வாண்டிலே உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பல நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும். நிச்சயம் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. குடும்பஸ்தர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகும். வண்டி வாகன யோகம், காணி பூமி யோகம் வாழ்க்கையிலே பல மாற்றங்கள் செய்வதற்கான சூழலும் அமையும். உங்களை பற்றி இருந்த தவறான அபிபிராயங்கள் மறைந்து உங்களுக்கு புகழ், செல்வாக்கும் உயரக்கூடிய சூழல் தென்படுகிறன. இவ்வாண்டில் நீங்கள் சின்ன முயற்சிகள் எடுத்தாலும் அதற்கான பலாபலன்களை நிச்சயம் அடையக்கூடிய வாய்ப்பு தென்படுகிறது. எனவே வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துவீர்க ளேயானால் இந்த 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் என்பதை மறக்க முடியாது. வாக்கு வாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். நிதானத்துடன் செயலாற்றுவீர்களேயானால் பல நன்மைகள் நிச்சயம் உங்களை வந்தடையும். தொழில் புரிப்பவர்களுக்கு இவ்வாண்டு பல மாற்றங்கள் தரக்கூடிய உங்கள் திறமைகள் வெளிவரக்கூடிய சூழல் தென்படும்.

துலாம்

பல மாற்றங்கள் தரக்கூடிய சிறப்பான ஆண்டாகும். உங்கள் எண்ணங்கள், செயற்திறன்கள் நிச்சயம் வெற்றி பெறும். போடுகின்ற திட்டங்களை செம்மையாக செயற்படுத்துவீர்கள் அத்தோடு அதற்கான பலன்களை நிச்சயம் அடைவீர்கள் குடும்பப் பிரச்சினைகள் விலக ஆரம்பிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து காணப்படும். எதிர்பார்த்த காரியங்களில் ஆரம்பத்தில் தாமதங்கள் வந்தாலும் அதனை காலப்போக்கில் வெற்றியாக மாற்றிக்கொள்வதற்கான சூழல் தென்படுகிறது. எனவே அவசர முடிவுகளை திட்டமிட்டு செயலாற்றுங்கள். இரவு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.கருத்து முரண்பாடுகளால் நல்ல நாட்பினை இழக்கக்கூடிய சூழல் உருவாகும். எனவே விட்டுக்கொடுத்தல் மிக மிகத் தேவை. இதனால் பல தடைகள் தானாக கரைந்து விடும். திட்டமிட்டு செயற்படுங்கள். இந்த ஆண்டு நிச்சயம் நன்மை பயக்கும் ஆண்டாக அமையும்.

விருச்சிகம்

2023 ஆம் ஆண்டு உங்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக அமையும். பல மாற்றங்களையும் நல்ல நல்ல நிகழ்வுகளையும் காணக்கூடிய சூழல் தென்படுகின்றது. எனவே பொறுமை மிக மிக அவசியம். இவ்வாண்டு 60 வீதமான நற்பலன்களை அடையக்கூடியவாய்ப்பு தென்படுகின்றது. அதற்கு உங்களின் கடின உழைப்பும் தைரியமும் தேவை. அவசர முடிவுகளை தவிர்த்து பொறுமையுடன் செயலாற்றுங்கள். எல்லாக் காரியங்களிலும் இழுபறித் தன்மை காணப்படும். எனவே திட்டமிட்டு செயலாற்றுவீர்களேயானால் நிச்சயம் வெற்றி அடையலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்கான சூழல் ஓரளவுக்கு தென்படுகின்றது. குடும்பத்தில் புதிய பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. உங்களுக்குள்ளே மனக்கவலையும் ஏற்படும். எல்லாவற்றிகும் இறைவன் மேல் நம்பிக்கை வையுங்கள். எனவே வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி அடைவீர்கள்.

தொடரும்……

Latest articles

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

இலங்கையை வந்தடைந்த‌ கிரிஸ்டல் செரினிட்டி சொகுசு கப்பல்……

இன்று (13) காலை கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பல் இந்தோனேசியாவிலிருந்து 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன்...

More like this

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...